/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா
/
கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா
ADDED : மே 16, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி தர்மபுரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சார்பில் துவங்கப்பட்ட கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா நேற்று நடந்தது. கடந்த, ஏப்., 24ல் துவங்கப்பட்ட முகாமில் தடகளம், வாலிபால், தேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுக்களில் கலந்து கொண்ட, 273 மாணவ, மாணவியருக்கு பயிற்றுனர்கள் உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிறைவு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பயிற்றுனர்கள் பாப்பாத்தி, சந்தோஷ்குமார், அருள்பிரபு, திவ்யதர்ஷினி, கலைமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.