ADDED : ஏப் 14, 2025 07:18 AM
தர்மபுரி: தர்மபுரியில், சேலம் சாலையில், பாரதிபுரம் பகுதியில் இருந்து, புதிய சர்ச் வரை குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நேற்று நடந்தது. முதன்மை குரு அருள்ராஜ் தலைமை வகித்தார். பாதர் ஜான் மில்லர் பங்கேற்றார். மேலும், உதவி பங்கு தந்தை யேசு பிரபாகரன், பாதர் அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், கிறிஸ்தவர்கள், குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி, கிறிஸ்துவ பாடல்களை பாடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, சிறப்பு திருப்பலி நடந்தது.
* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிபட்டியில் உள்ள புனித லுார்து மாதா அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. புனித லுார்து மாதா கெபி மலையிலிருந்து பி.பள்ளிப்பட்டியிலுள்ள ஆலயத்திற்கு, 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி, ஓசன்னா பாடல் பாடி ஊர்வலமாக சென்றனர். பங்குத்தந்தை அருள்ஜோதி, அருட்தந்தை அற்புதராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். பின் சிறப்பு ஆராதனை திருப்பலி நடத்தினர்.
* அரூரில், பங்கு தந்தை ஜான்மைக்கேல் தலைமையில், சந்தைமேட்டில் இருந்து கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி, ஓசன்னா பாடல் பாடியபடி பவனி சென்று, மொரப்பூர் சாலையிலுள்ள துாய இருதய ஆண்டவர் ஆலயத்தை அடைந்தனர்.
* கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள புனித இஞ்ஞியாசியார் ஆலயத்தில் இருந்து குருத்தோலை பவனி துவங்கி, காந்திசிலை, தர்மராஜா கோவில் தெரு வழியாக, புனித பாத்திமா அன்னை திருத்தலம் வந்தடைந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவ மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலையை ஏந்தி, 'உன்னதங்களின் ஓசாண்ணா' என்கிற பாடலை பாடியவாறு பவனி சென்றனர். தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதே போல், மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து கிறிஸ்துவ ஆலயங்களிலும், குருத்தோலை பவனி மற்றும் திருப்பலி நடந்தது.

