/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மனைவியை வெட்டிய சந்தேக கணவன் கைது
/
மனைவியை வெட்டிய சந்தேக கணவன் கைது
ADDED : ஆக 29, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் :அரூர் அடுத்த பேதாதம்பட்டியை சேர்ந்தவர் சுந்தர், 37. இவர் மனைவி சந்தியா, 30. காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு, மகள், மகன் உள்ளனர். சந்தியாவின் நடத்தையில் சந்தேகத்தால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், சந்தியா கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் காந்தி என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தன் குழந்தை
களுடன் வசித்தார்.
நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு அங்கு சென்ற சுந்தர், சந்தியாவை, கொடுவாளால் கழுத்து, தலை மற்றும் கையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சந்தியா, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோபிநாதம்பட்டி போலீசார், சுந்தரை நேற்று கைது செய்தனர்.

