/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புளி வணிகர்கள் நலச்சங்க 25-ம் ஆண்டு வெள்ளி விழா
/
புளி வணிகர்கள் நலச்சங்க 25-ம் ஆண்டு வெள்ளி விழா
ADDED : மே 21, 2024 11:01 AM
தர்மபுரி: தர்மபுரியில், மாவட்ட புளி வணிகர்கள் நலச்சங்க, 25-ம் ஆண்டு வெள்ளி விழா நடந்தது. சங்க நிறுவன தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாலக்கோடு அன்வர் பாஷா வரவேற்றார்.
புளி வணிகர்களின் தந்தை என்று அழைக்கப்படும் முன்னாள் எம்.எல்.ஏ., டி.என்.வடிவேல் கவுண்டர் உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். சங்க மாவட்ட செயலாளர் வினுபாஜ்ராஜ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
ழாவில், பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் சிங்காரம், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பா.ஜ., மாவட்ட தலைவர் பாஸ்கர், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மண்டல மேலாளர் குமரேசன், முதன்மை மேலாளர் சுபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் மார்ச், 1 முதல், புதிய புளி உற்பத்திக்கு பூஜை போட்டு பணிகளை தொடங்குவது, புளி கட்டும் பாய் மற்றும் கயிருக்கு ஒரு கிலோ பெற்று தந்த நிறுவனத்தலைவர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், தற்போது நிலவிவரும் வறட்சியால் புளி கட்டு கட்டும் பாய் கிடைக்காததால், விருப்பமுள்ள வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளில் புளி கட்டு தற்காலிகமாக கட்டிக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தர்மபுரி பகுதி தலைவர் பாபு நன்றி கூறினார்.

