/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பொறியியல் கல்லுாரியில் தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை
/
அரசு பொறியியல் கல்லுாரியில் தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை
அரசு பொறியியல் கல்லுாரியில் தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை
அரசு பொறியியல் கல்லுாரியில் தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை
ADDED : நவ 13, 2025 03:12 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், செட்டிக்கரை பகுதியிலுள்ள அரசினர் பொறி-யியல் கல்லுாரியில், -மாணவர்களிடையே தமிழர்களின் மரபு மற்றும் தமிழ் பெருமிதத்தை உணர்த்தும் வகையில், மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை விழா நேற்று நடந்தது.
தர்மபுரி, ஆர்.டி.ஓ., காயத்ரி மாபெரும் நிகழ்ச்சியின் நோக்கம், குறித்து அறிமுக உரையாற்றினார். வக்கீல் மதிவதனி 'தமிழ்நாடு சமூக நீதியின் திசைவழி' என்ற தலைப்பில் பேசினார்.கலை அறிவியல் கல்லுாரி கல்வி இயக்குனர் ராமலட்சுமி தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டார். விழாவில், தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில், கலந்து கொண்ட மாணவ, -மாணவியருக்கு தமிழ் பெரு-மிதம் குறித்து, சிறப்பான விளக்கம் அளித்தவர்களுக்கு 'பெருமித செல்வி, பெருமித செல்வன்' என்ற பட்டமும், சொற்பொழிவாள-ரிடம் சிறந்த கேள்விகள் கேட்ட மாணவர்களுக்கு 'கேள்வி நாயகி, கேள்வி நாயகன்' என்ற பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்-கப்பட்டன.
அரசு பொறியியல் கல்லுாரி ஆங்கில துறை பேராசிரியர் பிரேம்-குமார் ஒருங்கிணைத்தார்.

