/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான உதவி மையம் திறப்பு
/
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான உதவி மையம் திறப்பு
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான உதவி மையம் திறப்பு
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான உதவி மையம் திறப்பு
ADDED : நவ 13, 2025 03:14 AM
தர்மபுரி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, சந்-தேகம் மற்றும் புகார்கள் தெரிவிக்க, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் எண்கள் மற்றும் உதவி மையம் திறக்கப்பட்டது குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தர்மபுரி மாவட்-டத்தில் உள்ள, 5 சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த நவ., 4 அன்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 12,85,432 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு, 1,501 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூல-மாக, வழங்கப்பட்டு வருகிறது. அப்படிவங்களை வாக்காளர்கள் விபரங்களை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு, மீண்டும் வாக்குச்-சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும்.ஆவணங்கள் எதுவும் படிவத்துடன் இணைக்க வேண்டிய-தில்லை. பெறப்பட்ட படிங்கள் அனைத்தும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். கணக்கெடுப்பு படிவத்தின் தலைப்பு பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலரின் மொபைல் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்மூலம், வாக்குச்சாவடி நிலை அலு-வலரை தொடர்பு கொள்ளலாம்.
வாக்காளர்களுக்கு ஏதும் சந்தேகம் மற்றும் புகார் இருந்தால் தெரி-விக்க, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவ-லகத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண், 1950, வாட்ஸாப்- தேர்தல் உதவி எண், 94441 23456, தர்ம-புரி வாக்காளர் பதிவு அலுவலர், 04342 -260927, பாலக்கோடு, 04348- 222045, பென்னாகரம், 04342 -255636, பாப்பிரெட்டிப்-பட்டி, 04346- 246544, அரூர், 04346- 296565 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

