/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
/
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED : நவ 13, 2025 03:14 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள காலபை-ரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நேற்று நடந்தது. இதில், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம், ஏகாந்த ருத்ர ஹோமம், 8:00 மணிக்கு கோ பூஜை, அஸ்தவ பூஜை, 8:30 மணிக்கு பைரவர் உற்சவமூர்த்தி திருக்கோவிலை வலம் வருதல், தொடர்ந்து, காலபைரவருக்கு, 18 வகையான அபிஷேகங்கள் நடந்தன. இதில், சிறப்பு அலங்காரத்தில் காலபை-ரவர்
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு, 10:30 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு மூலம், சத்ரு சம்ஹார யாகம், 64 பைரவர் யாகம், மகா குருதி பூஜை, நள்ளிரவு, 2:30 மணிக்கு பைரவர் சுவாமி பல்-லக்கில் கோவில் வருதல், அதிகாலை, 3:00 மணிக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் உள்ளிட்டவை நடந்தன. திரளான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்து, வெண்பூசணியில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

