/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலை விரிவாக்க பணி நடக்கும் இடத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

ADDED : நவ 13, 2025 03:15 AM
தர்மபுரி:தர்மபுரி அருகே, நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து வரும் நிலையில், ராஜாப்பேட்டை பகுதியில் சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.
தர்மபுரியில் இருந்து அரூர், திருவண்ணாமலைக்கு தினமும் ஆயி-ரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், போக்-குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், நான்கு வழி சாலையாக அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி தர்மபுரி-, அரூர் வழியாக, திருவண்ணாம-லைக்கு, 113 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, 410 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.இதில், தர்மபுரி அடுத்த ராஜாப்பேட்டை முதல், சாக்கன்-கொட்டாய் வரை அரை கிலோ மீட்டர் துாரம் சாலை விரிவாக்கம் பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இதில், சாலையின் இருபுறமும் மற்ற இடங்களில் அமைத்த மழைநீர் கால்வாய் அமைக்காமல் பணி நடக்கிறது.
எனவே, ராஜாப்பேட்டை பகுதியிலும் மழைநீர் கால்வாய், சாலையின் இருபுறமும் அமைக்க வாகன ஓட்டிகள் மற்றும் அப்ப-குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.