/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2025 01:48 AM
கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி, தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்க மாநில தலைவர் செல்ல பாண்டியன் உள்ளிட்ட, 6 சங்கங்களின் நிர்வாகிகள் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், துாய்மை காவலர்களின் மாத ஊதியத்தை, 10,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக நிர்ணயமாக மாற்றி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, சலுகைகள் வழங்க வேண்டும்.
ஊரக வளர்ச்சி திட்டத்தில், 10 ஆண்டுகளாக பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட, 16 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் வரும் அக்., 29ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், மற்றும் நவ., 24ல், தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும் கூறினார்.தொடர்ந்து சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகள் குறித்து மனு அளித்து சென்றனர்.