/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மா.கம்யூ., நிர்வாகி கொலை வழக்கு தலைமறைவாக இருந்த இருவர் கைது
/
மா.கம்யூ., நிர்வாகி கொலை வழக்கு தலைமறைவாக இருந்த இருவர் கைது
மா.கம்யூ., நிர்வாகி கொலை வழக்கு தலைமறைவாக இருந்த இருவர் கைது
மா.கம்யூ., நிர்வாகி கொலை வழக்கு தலைமறைவாக இருந்த இருவர் கைது
ADDED : செப் 25, 2025 01:48 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அருகே, மா.கம்யூ., நிர்வாகி கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த தடிக்கல் அருகே முத்துராயன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ், 55; மா.கம்யூ., திப்பசந்திரம் முன்னாள் கிளை செயலாளர். கடந்த, 2 ஆண்டுக்கு முன், முத்துராயன் கொட்டாய் கிராமத்தில் இருந்த, காமன்தொட்டியை சேர்ந்த சின்னப்பா மனைவி எல்லம்மா என்பவருக்கு சொந்தமான நிலத்தை, தன் அக்கா மகன் ராமச்சந்திரனுக்கு வாங்கி கொடுத்தார்.
எல்லம்மா உறவினர்களான முத்துராயன்கொட்டாயை சேர்ந்த சின்னபுலிகான், 35, முரளி, 27, ஆகியோர், நிலத்தில் தங்களுக்கு உரிமை உள்ளது என கூறி, வெங்கடேஷிடம் தகராறு செய்து வந்தனர்.கடந்த மாதம், 8ம் தேதி காலை, பைக்கில் சென்ற வெங்கடேஷை வழிமறித்து கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அவர் கடந்த மாதம், 23ம் தேதி உயிரிழந்தார். கொலை வழக்குப்பதிந்த தேன்கனிக்கோட்டை போலீசார், சின்னபுலிகான், முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சின்னபுலிகானின் மனைவி சுசீலா, 35, தம்பி சிவக்குமார், 25, ஆகியோரை, திப்பசந்திரம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று போலீசார் கைது செய்தனர்.