ADDED : ஜூலை 12, 2026 03:31 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 59 அரசு டாஸ்மாக் கடைகளில், 326 பணியாளர்கள் உள்ளனர். இதில், டாஸ்மாக் பணியாளர்கள் சார்பில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் வாங்குவதை ரத்து செய்தல் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேற்று, 2வது நாளாக வேலைநிறுத்த போராட்-டத்தில் ஈடுபட்டனர். இதனால், 2வது நாளாக, தர்மபுரி மாவட்-டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
