/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தாமதமாக வந்த மாணவர்கள் பள்ளி கேட்டை பூட்டிய ஆசிரியர்
/
தாமதமாக வந்த மாணவர்கள் பள்ளி கேட்டை பூட்டிய ஆசிரியர்
தாமதமாக வந்த மாணவர்கள் பள்ளி கேட்டை பூட்டிய ஆசிரியர்
தாமதமாக வந்த மாணவர்கள் பள்ளி கேட்டை பூட்டிய ஆசிரியர்
ADDED : நவ 26, 2024 06:47 AM
கடத்துார்: தர்மபுரி மாவட்டம், கடத்துார் பேரூராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்-றிய தொடக்கப்பள்ளியில், 152 மாணவ, மாணவியர் படிக்கின்-றனர். வழக்கமாக இப் பள்ளி காலை, 9:10 மணிக்கு தொடங்கி மாலை, 4:10 முடிவடைகிறது. நேற்று காலை இப்பள்ளி கேட் குறித்த நேரத்தில், 9:10க்கு மூடப்பட்டது. அதற்கு பின் வந்த மாணவ, மாணவியரை பள்ளிக்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்தனர். சரியான நேரத்திற்குள் வந்தால் மட்டுமே அனு-மதிக்கப்படுவர் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பெற்றோர் கூறுகையில், 'பல்வேறு சூழல்கள், வேலைகள் காரணமாக சிறிது நேரம் பள்ளிக்கு தாமதமாக குழந்-தைகள் வந்தனர். ஆனால் சரியான நேரத்திற்கு கேட்டை இழுத்து மூடி விட்டனர். பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கு பிறகு ஆசிரி-யர்கள் கேட்டை திறந்து விட்டனர். குழந்தைகள் நீண்ட நேரம் கேட்டுக்கு வெளியே காத்துக் கிடந்தனர்' என்றனர்.இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியை இந்திராகாந்தியிடம் கேட்டபோது: பள்ளியில் காலை சிற்றுண்டிக்கு, 8:30 மணிக்கு வரச்சொன்னால், 9:15 மணிக்கு மாணவர்கள் வருகிறார்கள். அதற்காக, ஒரு நாள் வாசலில் நின்று, மாணவர்களுக்கு அறிவுரை கூறினேன். இன்று(நேற்று) காலை, 3 மாணவர்கள் மட்டுமே, காலை சிற்-றுண்டி சாப்பிட வந்தார்கள். இதற்காக மாணவர்களிடம் கேட்டேன். மற்றபடி மாணவர்களை வெளியே நிற்க வைக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் கிடையாது. மாணவர்களை ஒழுக்கத்துடன் படிக்க வைப்பதே நோக்கம். இவ்வாறு, அவர் கூறினார்

