/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கார்த்திகை மாத அமாவாசை களைகட்டிய கோவில்கள்
/
கார்த்திகை மாத அமாவாசை களைகட்டிய கோவில்கள்
ADDED : டிச 01, 2024 01:39 AM
தர்மபுரி, டிச. 1-
கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, தர்மபுரி வெளிபேட்டைதெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு நேற்று காலை, பால், பன்னீர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. தொடர்ந்து, கடைவீதி, வெளிபேட்டைதெரு, குப்பாகவுண்டர் தெரு உள்ளிட்ட வீதிகளின் வழியாக சுவாமி ஊர்வலம் நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோல், எஸ்.வி.,ரோடு பகுதிகளிலுள்ள அங்காளம்மன் கோவில், அபய ஆஞ்நேயர் கோவில், முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கணவாய் ஆஞ்சநேயர் கோவில், மொடக்கோரி ஆற்றில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, சுவாமிகளுக்கு அபிஷேக, அலங்காரங்கள் நடந்தன.