/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாகன நெரிசலை தவிர்க்க தற்காலிக பைக் ஸ்டாண்ட் அமைப்பு
/
வாகன நெரிசலை தவிர்க்க தற்காலிக பைக் ஸ்டாண்ட் அமைப்பு
வாகன நெரிசலை தவிர்க்க தற்காலிக பைக் ஸ்டாண்ட் அமைப்பு
வாகன நெரிசலை தவிர்க்க தற்காலிக பைக் ஸ்டாண்ட் அமைப்பு
ADDED : ஜன 16, 2025 07:17 AM
தர்மபுரி: தர்மபுரியில், பொங்கல் கூட்ட நெரிசலை தவிர்க்க, போலீசார் தற்காலிக பைக் ஸ்டாண்ட் அமைத்து, போக்குவரத்தை சீர்படுத்தி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த, 3 நாட்களாக நடக்கும் பொங்கல் திருவிழாவுக்கு, பொதுமக்கள், புத்தாடை, அணிகலன்கள், காலனி மற்றும் ஷீ உள்ளிட்டவற்றை வாங்க, தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் பகுதியிலுள்ள கடைகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால், சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆச்சாரி தெரு உள்ளிட்ட வீதிகளில், அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, தர்மபுரி போக்குவரத்து எஸ்.ஐ., சின்னசாமி தலைமையில், போலீசார் கோமதி மற்றும் ரகுநாதன் ஆகியோர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், கடைகளுக்கு டூவீலரில் வரும் வாடிக்கையாளர்கள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் சாலை சென்டர் மீடியன் முன் நிறுத்த ஏற்பாடு செய்தனர். அதன்படி, மக்கள், சாலையின் சென்டர் மீடியன் அருகில் தங்களது பைக்குகளை நிறுத்தி சென்றதால், போக்குவரத்து சீராக இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

