/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
த.வெ.க.,விற்கு தாவிய தி.மு.க., மாணவரணி மாவட்ட அமைப்பாளர்
/
த.வெ.க.,விற்கு தாவிய தி.மு.க., மாணவரணி மாவட்ட அமைப்பாளர்
த.வெ.க.,விற்கு தாவிய தி.மு.க., மாணவரணி மாவட்ட அமைப்பாளர்
த.வெ.க.,விற்கு தாவிய தி.மு.க., மாணவரணி மாவட்ட அமைப்பாளர்
ADDED : நவ 10, 2024 01:36 AM
த.வெ.க.,விற்கு தாவிய தி.மு.க.,
மாணவரணி மாவட்ட அமைப்பாளர்
தர்மபுரி, நவ. 10--
த.வெ.க.,விற்கு தாவிய, தி.மு.க., மாணவரணி மாவட்ட அமைப்பாளரால், தர்மபுரி, தி.மு.க., அதிர்ச்சியடைந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த சந்துரு, தி.மு.க., மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்தார். நேற்று முன்தினம் தன் ஆதரவாளர்களுடன், தர்மபுரி மாவட்ட, த.வெ.க., தலைவர் சிவா முன்னிலையில், த.வெ.க.,வில் இணைந்தாக தகவல் வெளியானது.
இது குறித்து, த.வெ.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தி.மு.க., மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்த சந்துரு, முன்னாள் பாலக்கோடு, தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடாசலத்தின் உறவினர். தி.மு.க.,வில் பெயரளவிற்கு பொறுப்பு கொடுத்திருந்தனர். மாணவரணிக்கான முடிவுகளை கட்சியின் மூத்த முன்னோடிகளே எடுத்து வருகின்றனர். ரப்பர் ஸ்டாம்பாக இருக்க விரும்பாத சந்துரு, நேற்று முன்தினம் ஆதரவாளர்களுடன் வந்து, தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா முன்னிலையில், த.வெ.க.,வில் இணைந்தார். இந்த புகைப்படம் வெளியானதும், தர்மபுரி மாவட்ட, தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்தனர். நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை சந்துருவை சமாதானம் செய்ய முயற்சித்தனர். நேற்று, கரூரில் நடந்த மாணவரணி கூட்டத்திற்கு வலுக்கட்டாமாக அழைத்து சென்றனர். தி.மு.க.,வை வெறுத்து, விஜய்யின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட சந்துரு, த.வெ.க.,விற்கு வந்தார்.
இவ்வாறு கூறினர். இது குறித்து, சந்துருவிடம் கேட்க, அவரை தொடர்புகொண்டபோது, அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்தது. தி.மு.க.,வின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர், த.வெ.க.,விற்கு தாவியது, தர்மபுரி மாவட்ட, தி.மு.க.,வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் கட்சியை விட்டு சென்ற, சில மணி நேரத்தில், மீண்டும் கட்சிக்கு திரும்பி விட்டதாக, தி.மு.க.,வினர் சமூக வலைதளத்தில், தகவல்
பரப்பி வருகின்றனர்.