/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தம்பியை கொன்ற அண்ணன் தளி அருகே தலைமறைவு
/
தம்பியை கொன்ற அண்ணன் தளி அருகே தலைமறைவு
ADDED : மார் 31, 2025 01:54 AM
தளி: தளி அருகே, தன் குழந்தைகளை திட்டியதை தட்டி கேட்ட தம்-பியை, அண்ணன் அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா, 36. இவர் மனைவி நாகரத்-தினா, 28. இருவரும், ஓசூர் அருகே தாசனபுரத்தில் தங்கி, நக்க-லய்யா, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு, 5 மற்றும் 6 வயதில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
லட்சுமிபுரத்திலுள்ள அவரது தாய் வீட்டில், இரு குழந்தைகளும் வளர்ந்து வந்தன. இது அவரது அண்ணன் சின்னைய்யா, 38, என்-பவருக்கு பிடிக்கவில்லை. குழந்தைகள் சேட்டை செய்து வருவ-தாக கூறியுள்ளார். குழந்தைகளையும் திட்டி
வந்துள்ளார்.
யுகாதி பண்டிகையை கொண்டாட, சொந்த ஊரான லட்சுமிபுரத்-திற்கு நக்கலய்யா நேற்று முன்தினம் வந்திருந்தார்.
அப்போது, தன் குழந்தைகளை அண்ணன் சின்னைய்யா திட்டு-வதை அறிந்த நக்கலய்யா, அவரை தட்டி கேட்டுள்ளார்.
இதனால், நேற்று முன்தினம் இரவில் இருந்தே இருவருக்கும் அடிக்கடி குடிபோதையில் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மதியம், 2:00 மணிக்கு, நக்கலய்யா வீட்டில் துாங்கி கொண்டி-ருந்தார்.
அங்கு வந்த அண்ணன் சின்னய்யா, நக்கலய்யா கழுத்தை அரி-வாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பினார். தேன்கனிக்-கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். நக்கலய்யா மனைவி புகார் படி, தளி போலீசார், சின்-னைய்யாவை தேடி வருகின்றனர்.