sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரூ.11 லட்சத்தில் கட்டிய தடுப்பணை2 ஆண்டிலேயே உடைந்த அவலம்

/

ரூ.11 லட்சத்தில் கட்டிய தடுப்பணை2 ஆண்டிலேயே உடைந்த அவலம்

ரூ.11 லட்சத்தில் கட்டிய தடுப்பணை2 ஆண்டிலேயே உடைந்த அவலம்

ரூ.11 லட்சத்தில் கட்டிய தடுப்பணை2 ஆண்டிலேயே உடைந்த அவலம்


ADDED : மே 03, 2025 12:59 AM

Google News

ADDED : மே 03, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாகலஹள்ளி, சிவாடி பஞ்.,க்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதியில், பெரியளவில் ஏரிகள் இல்லாததால், மானாவாரி சாகுபடி மற்றும் கிணற்று பாசனம் மட்டும் நடக்கிறது. நல்லம்பள்ளி ஒன்றியம், சிவாடி பஞ்., ராமாயன சின்னஹள்ளியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர், 100 ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் செய்கின்றனர். மழை காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணற்று பாசனம் மூலம் நடக்கும் விவசாய பணிகள், கோடையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தால், தரிசு பூமியாக மாறி விடுகிறது.

இதனால், பாகலஹள்ளி, சிவாடி, சவுளுர், சேசம்பட்டியிலுள்ள சிறிய அளவிலான ஏரிகளின் நீரோடைகளில், ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி, நீரை தேக்கினால், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி

விவசாயம் செழிப்படையும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதில், பாகலஹள்ளி ஏரியிலிருந்து, சிவாடி ஏரிக்கு செல்லும், நீர்வழி பாதை இடையே தடுப்பணை கட்ட, கடந்த, 2 ஆண்டுக்கு முன், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தில், 11 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 5.30 அடி உயரத்தில், 20 அடி நீளத்திற்கு தடுப்பணை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், அடித்தளம் உள்ளிட்டவற்றிற்கு குறைந்தளவு சிமென்ட் கலவையை பயன்படுத்தி, தரமற்ற முறையில் பணி மேற்கொண்டதால், 2 ஆண்டிலேயே தடுப்பணையின் நடுப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீரோடையில் தண்ணீர் வந்தாலும், சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us