/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
48,000 ரூபாயுடன் கிடந்த பர்ஸ் போலீசில் ஒப்படைத்த டிரைவர்
/
48,000 ரூபாயுடன் கிடந்த பர்ஸ் போலீசில் ஒப்படைத்த டிரைவர்
48,000 ரூபாயுடன் கிடந்த பர்ஸ் போலீசில் ஒப்படைத்த டிரைவர்
48,000 ரூபாயுடன் கிடந்த பர்ஸ் போலீசில் ஒப்படைத்த டிரைவர்
ADDED : ஜன 21, 2024 12:28 PM
தர்மபுரி: தர்மபுரி, டவுன் பஸ் ஸ்டாண்டில், 48,000 ரூபாயுடன் கிடந்த பர்ஸை கண்டெடுத்த ஆட்டோ ஓட்டுனர் அதை, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் நேற்று, ஒரு பர்ஸ் கேட்பாரற்று கிடந்தது. இதை, தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுனர் குலேந்திரன் என்பவர் கண்டெடுத்தார். இதை, மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதத்திடம் ஒப்படைத்தார். அதில், 48,000 ரூபாய் மற்றும் ஏ.டி.எம்., கார்டு, கிரெடிட் கார்டு, ஆதார், பான் உள்ளிட்ட கார்டுகள் இருந்தன. இதை, போலீசார் பெற்றுக் கொண்டு விசாரித்து வந்தனர்.
இதில், அந்த பர்ஸ் பாலக்கோடு பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. பின், அவரது மொபைல்போனில் தொடர்பு கொண்டு, அவரிடம் உரிய முறையில் அவரது பர்ஸ் ஒப்படைக்கப்பட்டது.