/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நிரந்தர கட்டடம் இல்லாத தீயணைப்பு நிலையம் அடிப்படை வசதி இல்லாததால் வீரர்கள் அவதி
/
நிரந்தர கட்டடம் இல்லாத தீயணைப்பு நிலையம் அடிப்படை வசதி இல்லாததால் வீரர்கள் அவதி
நிரந்தர கட்டடம் இல்லாத தீயணைப்பு நிலையம் அடிப்படை வசதி இல்லாததால் வீரர்கள் அவதி
நிரந்தர கட்டடம் இல்லாத தீயணைப்பு நிலையம் அடிப்படை வசதி இல்லாததால் வீரர்கள் அவதி
ADDED : அக் 03, 2024 06:51 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, தனியார் மரவள்ளி கிழங்கு அரவை ஆலை, நூற்-பாலைகள், பெரிய அளவிலான கோழிப்பண்-ணைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், இன்-ஜினியரிங் காலேஜ், வாணியாறு நீர்த்தேக்கம், வாகன விபத்து நேரிடும் மஞ்சவாடி கணவாய், போக்குவரத்து மிகுந்த அரூர் -சேலம் சாலை அடர்ந்த வனப் பகுதிகள் இருக்கின்றன.
இதனால் பாப்பிரெட்டிப்பட்டிக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 2017 ஜூலை,4 ல் பாப்பிரெட்டிப்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் தனியார் வாடகை கட்டிடத்தில் துவங்கப்பட்டது. இங்கு, 17 பேர் பணிபுரிந்து வருகின்றனர். 7 ஆண்டு ஆகியும் இதுவரை சொந்த கட்டிடம் கட்ட அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்-போக்கு நிலம் இருந்தும், தீயணைப்பு நிலையத்-திற்க்கு இடம் ஒதுக்க வருவாய் துறையினர், போதிய ஆர்வம் காட்டாததால் புதிய அலுவலகம் கட்ட அரசு நிதியும் ஒதுக்கவில்லை. தொடர்ந்து வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.தனியார் கட்டடத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் தீயணைப்புத் துறை வீரர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் இங்கு அமைந்துள்ள தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

