/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2ம் கட்ட பணியை ஜப்பான் குழு ஆய்வு
/
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2ம் கட்ட பணியை ஜப்பான் குழு ஆய்வு
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2ம் கட்ட பணியை ஜப்பான் குழு ஆய்வு
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2ம் கட்ட பணியை ஜப்பான் குழு ஆய்வு
ADDED : மார் 12, 2024 04:04 AM
பென்னாகரம்: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், 2ம் கட்ட பணிகளை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன், ஜப்பான் நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், 2ம் கட்ட பணிகள் துவக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்திருந்தார்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர், 2ம் திட்டத்திற்கான மதிப்பீட்டை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழில்நுட்ப குழு தயாரித்துள்ளது. பன்னாட்டு நிதிஉதவி பெறும் திட்டத்தில், 7,890 கோடி ரூபாய், நிதியுதவி பெற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, ஒப்புதல்
பெறப்பட்டுள்ளது.
இத்திட்டதிற்கு நிதியுதவி செய்யவுள்ள ஜப்பான் நிபுணர் குழு நேற்று, 2ம் கட்ட கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையுள்ள இடத்தை, தர்மபுரி கலெக்டர் சாந்தி தலைமையில் பார்வையிட்டது. முன்னதாக, ஏற்கனவே ஒனேக்கல்லில் அமைந்துள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நீரேற்றும் நிலையத்தை குழு பார்வையிட்டது.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இணை இயக்குனர் ஆனந்த் மோகன், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயற்பொறியாளர் ரவிக்குமார், பாலசுப்பிரமணியன், பென்னாகரம் தாசில்தார் சுகுமார், பி.டி.ஓ., கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

