/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோடை மழை பொய்த்து போனதால் மரங்களில் உதிரும் மா பிஞ்சுகள்; விவசாயிகள் வேதனை

ADDED : ஏப் 01, 2024 03:51 AM
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் ஏற்பட்டு வரும் கோடை வெயிலால், மா மரத்தில் உள்ள பூக்கள் மற்றும் மா பிஞ்சுகள் உதிர்ந்து வருகிறது.
தர்மபுரி, பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில், 10,000 ஏக்கரில் மா சாகுபடி நடக்கிறது. தற்போது கோடை வெயில் மற்றும் கடும் வறட்சியினால், மா பூக்கள் மற்றும் மா பிஞ்சுகள் உதிர்ந்து வருகிறது. இதனால், இதை சாகுபடி செய்த விவசாயிகள் மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், கவலை அடைந்துள்ளனர். பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், ஜிட்டாண்டஹள்ளி, அண்ணாமலைஹள்ளி, குண்டாங்காடு போன்ற பகுதிகளில் மாம்பழங்கள் விளைகிறது. பெங்களூரா, அல்போன்சா, பீத்தர், மல்கோவா, நீலம், பங்கனபள்ளி போன்ற, 30க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகளை விளைவித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கோடை வறட்சியினால், மாம்பூக்கள் கருகி உதிர்கின்றன. இதனால், நடப்பாண்டில், மா உற்பத்தி கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, தமிழக அரசு இப்பகுதியில், நீர்பாசன திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.