/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு கல்லூரிக்கு லாரிகளில் தண்ணீர் அனுப்பிய எம்.எல்.ஏ.,
/
அரசு கல்லூரிக்கு லாரிகளில் தண்ணீர் அனுப்பிய எம்.எல்.ஏ.,
அரசு கல்லூரிக்கு லாரிகளில் தண்ணீர் அனுப்பிய எம்.எல்.ஏ.,
அரசு கல்லூரிக்கு லாரிகளில் தண்ணீர் அனுப்பிய எம்.எல்.ஏ.,
ADDED : மார் 06, 2024 06:36 AM
பாலக்கோடு : தண்ணீர் தட்டுப்பாட்டால், கல்லுாரி மாணவர்கள் அவதிப்பட்டதால், பாலக்கோடு அரசு கல்லுாரிக்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் லாரிகள் மூலம், தண்ணீர் அனுப்பினார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பின்புறம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு, 2,800 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தற்போது, கோடைக்காலம் துவங்கிய நிலையில், கல்லுாரியிலுள்ள ஆழ்துளை கிணறுகள், நீரின்றி வறண்டன. இதனால், கல்லுாரியிலுள்ள கழிவறைக்கு தண்ணீர் இல்லாமல் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், மாணவ, மாணவியர், பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகனிடம் தண்ணீர் கேட்டு கோரிக்கை வைத்தனர். அதைதொடர்ந்து அவர், லாரிகள் மூலம் கல்லுாரிக்கு தண்ணீர் அனுப்பி வைத்தார். மேலும், மாணவ, மாணவியர் சார்பில், கல்லுாரிக்கு நிரந்தரமாக தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

