ADDED : ஜூலை 15, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த சிக்களூரை சேர்ந்தவர் சாந்தா, 37, கூலித்தொழி-லாளி; இவரது கணவர் ஜெயராமன் கடந்த, 17 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
கடந்த, 7ல் மதியம், 1:00 மணிக்கு சாந்-தாவின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டிலிருந்த ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள், 20,000 ரொக்கம், வீட்டு உபயோக பொருட்கள், சமையல் சாமான்கள் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமானது. சாந்தா புகார் படி கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.