/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நிலத்தகராறில் கடைகாரருக்கு கொடுவாள் வெட்டு
/
நிலத்தகராறில் கடைகாரருக்கு கொடுவாள் வெட்டு
ADDED : ஆக 01, 2025 01:42 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி பிள்ளையார் கோவில், மேல்தெருவை சேர்ந்தவர் கார்த்தீஸ்குமார், 43. மொபைல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது, கடைக்கு அருகில் கனகவேல், 40, என்பவர் மிக்ஸி, கிரைண்டர் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இருவருக்கும் நிலம் சம்பந்தமான தகராறு ஏற்பட்டு, பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பாப்பிரெட்டிப்பட்டி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கனகவேல் விசாரணைக்கு ஆஜராகாததால், கார்த்தீஸ்குமாருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் நிலை இருந்தது.
இதையறிந்த கனகவேல் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் பாபு, 32, ஆகிய இருவரும், நேற்று முன்தினம் இரவு, 9:15 மணியளவில் கார்த்தீஸ்குமார் கடைக்கு வந்து, அவரை தகாத வார்த்தையால் திட்டி, கொடுவாளால் தலையில் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த கார்த்தீஸ்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகார் படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.