/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 04, 2024 06:03 AM
தர்மபுரி: தமிழக அரசு தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு, மாநிலம் தழுவிய பணி மாறுதலை அமல்படுத்தி, பணி மாறுதலுக்கான நேர்காணல் நடந்து வருகி-றது. இதை கண்டிக்கும் வகையில், தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை சார்பில் தமிழக முழுவதும் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன், 243 அரசாணையை தமி-ழக அரசு ரத்து செய்து, பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, மாவட்ட ஒருங்கி-ணைப்பாளர் சிவகுமார் தலைமையில் ஆர்ப்-பாட்டம் நடந்தது. இதில், தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி, 243 அரசணையை ரத்து செய்ய வலியுறுத்தி, நுாற்றுக்கும் மேற்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* அரூர் மாவட்ட கல்வி அலுவலகம் முன், நேற்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்-களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜ-ராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும், 90 சதவீத ஆசிரியர்களை, குறிப்பாக பெண் ஆசிரி-யர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் வெளியிட்-டுள்ள அரசாணை எண்: 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.