/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கூத்தப்பாடியில் ஊர் கூடி பொங்கல்
/
கூத்தப்பாடியில் ஊர் கூடி பொங்கல்
ADDED : ஜன 16, 2024 10:38 AM
பென்னாகரம்: பென்னாகரத்தை அடுத்த கூத்தப்பாடியில் ஊர் கூடி பொங்கல் வைத்து தைப்பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பாரம்பரிய பண்பாடு, கலை, இலக்கியம் உள்ளிட்டவற்றை இந்த தலைமுறையிலும் தொடர்ச்சியாக கடைப்பிடித்து வரும், கூத்தப்பாடி கிராமத்தில், ஊர் கூடி பொங்கல் வைக்கும் நிகழ்வு நடக்கிறது. பொங்கல் வைக்க விரும்புபவர்கள் நடுவீதியில் பொங்கல் வைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதில், விருப்பம் உள்ளவர்கள் பொங்கல் வைத்து வழிபடலாம்.
கடந்தாண்டு முதல் இதுபோன்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்ட வருகிறது. கடந்தாண்டை விட இந்த ஆண்டு ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் ஊர் கூடி பொங்கல் வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பொங்கல் திருவிழாவை குடும்பத்தோடு கொண்டாடினர். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட இருக்கின்றன. மூன்று நாட்களும் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. தொடர்ந்து மாடுகளுக்கு சிறப்பு செய்து, மாடு ஓட்டுதல், எருதாட்டம், பட்டிமன்றம் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை, கூத்தப்பாடி ஊர் கவுண்டர்கள் மற்றும் விளையாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.