/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
6 ஆண்டாக சாலையை சீரமைக்கவில்லை தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு
/
6 ஆண்டாக சாலையை சீரமைக்கவில்லை தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு
6 ஆண்டாக சாலையை சீரமைக்கவில்லை தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு
6 ஆண்டாக சாலையை சீரமைக்கவில்லை தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு
ADDED : பிப் 15, 2024 10:41 AM
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்ட நிர்வாகம், எந்த அடிப்படை வசதியையும் செய்து கொடுக்காமலும், சாலையை சீரமைத்து தராததாலும், வருகின்ற லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, கம்மம்பட்டி பஞ்., பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எங்கள் பகுதிக்கு, எந்த கட்சி வேட்பாளர்களும் ஓட்டு கேட்டு வரக்கூடாது என, கோஷம் எழுப்பிய மக்கள், சாலையை சீரமைக்காத, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சோழியானுார் - மலையூர்காடு செல்லும் சாலையில், வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, பேனர் வைத்துள்ளனர்.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த மாரியப்பன் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்மம்பட்டி பஞ்., உட்பட்ட மலையூர்காடு, மூலக்காடு, மணியக்காரனுார், சோளியானுார் உள்ளிட்ட பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அப்பகுதியில் இருந்து, தினமும் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், தர்மபுரி மாவட்டத்திலிருந்து நேரடி போக்குவரத்து வசதி இல்லாததால், சேலம் மாவட்டத்தில் இருந்து வரும் பஸ்களை நம்பி உள்ளனர். இப்பகுதிக்கு செல்லும், 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட, 8 கி.மீ., நீள சாலை, 6 ஆண்டுக்கு முன் சேதமாகி விட்டது. கடந்த ஒரு வருடமாக சாலை மிகவும் மோசமாகி, பஸ்கள் செல்ல முடியாத தகுதியற்ற சாலையாக மாறியதால், சேலம் மாவட்டத்திலிருந்து இயக்கிய அரசு பஸ்களில் ஒன்றை நிறுத்தி விட்டனர். காலை, மாலையில் பள்ளி மாணவர்களுக்காக, 2 பஸ் இயக்கப் படுகிறது. மற்ற நேரங்களில், பொதுமக்களுக்கான பஸ் வசதி இல்லை.
இது குறித்து, பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் எம்.எல்.ஏ., - எம்.பி., உள்ளிட்டோரிடம் முறையிட்டும் பயனில்லை. சாலை முழுவதும் சேதமானதால், மண்ணை கொட்டி மண் சாலையாக மாற்றி விட்டனர். காலை நேரத்தில் வரும் பஸ்களை தவற விட்டால், பைக் அல்லது சரக்கு வாகனங்களில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பும் நிலை உள்ளது. மேலும், மருத்துவ வசதிகள் மற்றும் பிரசவத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்கள் எங்கள் பகுதிக்கு மோசமான சாலையின் காரணமாக வருவதில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.

