/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அதிக மாடுகளை வாகனத்தில் அடைத்து செல்லும் அவலம்
/
அதிக மாடுகளை வாகனத்தில் அடைத்து செல்லும் அவலம்
ADDED : அக் 07, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த புழுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமையும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வெள்ளிக்கிழமையும் மாட்டுச்சந்தை கூடுகிறது.
இங்கிருந்து, இறைச்சிக்கான மாடுகளை, அரூர், சேலம் வழியாக, கேரளாவுக்கு லாரிகளில் கொண்டு செல்லும்போது அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றிச்செல்வது, உரிய சான்றுகள் வைத்துக் கொள்ளாதது, உணவு மற்றும் நீர் கொடுக்காதது, பணியாளர் இல்லாதது என, மாட்டு வியாபாரிகள் செய்யும் விதிமீறல்கள் அதிகம். இவற்றை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. எனவே, வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றிச் செல்வோர் மீது, நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

