ADDED : ஏப் 18, 2025 02:07 AM
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட் டம் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மோளையானுார் கட்சி அலுவலகத்தில், சுதந்திர போராட்ட வீரர், தீரன் சின்னமலையின், 269வது பிறந்தநாளையொட்டி, மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ், சக்திவேல், முகிலன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று கவுண்டம்பட்டி, ராமியம் பட்டியிலுள்ள உருவ சிலைகளுக்கும், மெணசி, மோளையானுார் பாப்பிரெட்டிப்பட்டி, துரிஞ்சிப்பட்டி மூக்காரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், தீரன் சின்னமலையின் படத்திற்கும், தி.மு.க.,வினர் மலர் துாவி, மரியாதை செலுத்தினர்.