/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
/
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED : ஜன 22, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியையொட்டி, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை, தட்சணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சாம்பல் பூசணியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு தட்சணகாசி காலபைரவருக்கு பல்வேறு யாகங்கள் நடந்தன.
தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜை நடந்தது. பின், மூலவருக்கு அலங்காரம் நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு யாக பூஜை நடந்தது. இதேபோல், தர்மபுரி நகர் கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் பிரகாரத்திலுள்ள பைரவருக்கு நேற்று, சிறப்பு பூஜை நடந்தது.