/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளியில் திருக்குறள் பயிற்சி வகுப்பு
/
அரசு பள்ளியில் திருக்குறள் பயிற்சி வகுப்பு
ADDED : நவ 26, 2025 02:13 AM
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த ஓபிளிநாய்க்கனஹள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை திருக்குறள் திருப்பணிகள் திட்டம் முப்பால் பயிற்றுனர் மன்றத்தாரால் திருக்குறள் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.
ஆசிரியர் அண்ணாமலை வரவேற்றார். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பொறுப்பாளர் பாவலர் மலர்வண்ணண் பேசினார். நுாலகர் சரவணன், புலவர் மகாலிங்கம் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தினர். திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பி.இ.ஓ., பச்சையப்பன், அனுமந்தன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஆசிரியர் செந்தில் நன்றி கூறினார்.

