ADDED : டிச 02, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த சில்லாரஹள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை திருக்குறள் திருப்பணிகள் திட்டம் முப்பால் பயிற்றுனர் மன்றத்தாரால் திருக்குறள் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேலன் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் பொன்னுசாமி வரவேற்றார்.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பொறுப்பாளர் பாவலர் மலர்வண்ணண் பேசினார். நுாலகர் சரவணன், புலவர் மகாலிங்கம் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தினர். திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் திருப்பதி நன்றி கூறினார்.

