/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரயில்வே அமைச்சரிடம் மனு கொடுத்ததால் திருவனந்தபுரம் ரயில் நின்று செல்ல உத்தரவு
/
ரயில்வே அமைச்சரிடம் மனு கொடுத்ததால் திருவனந்தபுரம் ரயில் நின்று செல்ல உத்தரவு
ரயில்வே அமைச்சரிடம் மனு கொடுத்ததால் திருவனந்தபுரம் ரயில் நின்று செல்ல உத்தரவு
ரயில்வே அமைச்சரிடம் மனு கொடுத்ததால் திருவனந்தபுரம் ரயில் நின்று செல்ல உத்தரவு
ADDED : டிச 28, 2025 08:30 AM

மொரப்பூர்: 'ரயில்வே அமைச்சரிடம் மனு கொடுத்ததால், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், மொரப்பூரில் நின்று செல்கிறது, '' என, தர்மபுரி தி.மு.க., எம்.பி., மணி நிருபர்களிடம் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: தர்மபுரி லோக்சபா தொகுதியில் உள்ள, மக்களின் கோரிக்கைகளை ஏற்று ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறேன். மொரப்பூர் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களையும், மொரப்பூர் மற்றும் பொம்மிடி ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்-தனர்.
இதையேற்று மொரப்பூர் வழியாக செல்லும், 6 ரயில்கள் மொரப்பூர், பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல வலியுறுத்தி, ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை, 2024 டிச., 3ல் சந்தித்து மனு அளித்தேன்.
மேலும், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று சென்ற பெரும்பாலான ரயில்கள், கொரோனா காலத்திற்கு பின் நிறுத்தப்பட்டு விட்-டது. அவற்றை மீண்டும்
மொரப்பூர் ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். தற்போது, சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், வரும் ஜன., 1 முதல், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்வதற்கு உத்தரவிட்-டுள்ளார். மொரப்பூர்தர்மபுரி ரயில் திட்டம், முன்னாள் எம்.பி., செந்தில்குமார் மற்றும் நானும் அவ்வப்-போது மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியு-றுத்தியதால் வந்துள்ளது. விரைவில் மொரப்பூர்-தர்மபுரி ரயில் திட்டப் பணிகள் துவங்கப்படும். இவ்வாறு கூறினார்.

