/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அஞ்செட்டி தேங்காய் வியாபாரியை கழுத்தை அறுத்து கொன்ற 3 பேர் கைது
/
அஞ்செட்டி தேங்காய் வியாபாரியை கழுத்தை அறுத்து கொன்ற 3 பேர் கைது
அஞ்செட்டி தேங்காய் வியாபாரியை கழுத்தை அறுத்து கொன்ற 3 பேர் கைது
அஞ்செட்டி தேங்காய் வியாபாரியை கழுத்தை அறுத்து கொன்ற 3 பேர் கைது
ADDED : டிச 11, 2025 06:41 AM
பென்னாகரம்: ஒகேனக்கல், நீலகிரிதோப்பு வனத்தில் தேங்காய் வியாபாரியின் கழுத்தை அறுத்து கொன்ற மூன்று பேரை, ஒகேனக்கல் போலீசார் நேற்று கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் ஆலம்பாடி அருகே நீலகிரி தோப்பு வனத்தையொட்டிய ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம், கைகள் கயிறால் கட்டப்பட்ட நிலையில், கடந்த, 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்தது. அதை, பென்னாகரம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் மற்றும் ஒகேனக்கல் போலீசார் மீட்டு விசா-ரணை நடத்தினர். இதில், இறந்தவர் கிருஷ்ண-கிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்த தேங்காய் வியாபாரி ருத்ராட்ச ராவ், 35, என தெரிந்தது. விசாரணையில், ருத்ராட்சராவ் ஒரு பெண்ணை கேலி செய்ததால், ஆத்திரமடைந்த அப்-பெண்ணின் உறவினர்கள் ருத்ராட்சராவை மது அருந்தலாம் எனக்கூறி அழைத்து சென்று, ஒகே-னக்கல் வனப்பகுதியில், அவரின் கழுத்தை அறுத்து கொன்று, காவிரியாற்றில் வீசி உள்-ளனர். இதுதொடர்பாக, மூன்று பேரை பிடித்து, ஒகேனக்கல் போலீசார் விசாரித்து வந்தனர். இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், கேரட்டியை சேர்ந்த முருகேசன், 49, ஒகேனக்கல் இந்திரா நகரை சேர்ந்த நாகராஜ், 45, சாணார் கொட்டாயை சேர்ந்த மூர்த்தி, 35, ஆகிய மூவரும் சேர்ந்து, ருத்-ராட்சராவை கடந்த, 5ல், ஒகேனக்கல் அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர், ஒகேனக்கல் ஆலம்பாடி அடுத்த நீலகிரி-தோப்பு என்ற இடத்தில், நால்வரும் சேர்ந்து மது அருந்தினர். மது போதையில் முருகேசன், நாகராஜ், மூர்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து, ருத்-ராட்சராவின் கழுத்தை அறுத்தும் வயிற்றை கிழித்தும் கொலை செய்துள்ளனர். பின்னர் அவ-ரது கைகளை கட்டி ஆற்றில் வீசி உள்ளனர் என, தெரிய வந்தது.
இதைதொடர்ந்து, ஒகேனக்கல் போலீசார் முரு-கேசன், நாகராஜ், மூர்த்தி ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர்.

