ADDED : செப் 04, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, ஆசிரியர் தின விழா என முப்பெரும் விழா அருட்தந்தை அருள்ஜோதி தலைமையில் நடந்தது.
பொம்மிடி எஸ்.ஐ., மாரப்பன், பட்டதாரி ஆசிரியர் அருள்பாரதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் மெர்சலின் ரோஸ் வரவேற்றார். விழாவில், சமூக ஆர்வலர் ரமேஷ், பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். முன்னதாக, பள்ளி மாணவ, மாணவியரின் மாரத்தான் ஓட்டத்தை, பொம்மிடி பஸ் ஸ்டாண்டில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவர்கள் தீப ஒளி ஏந்தி, 6 கி.மீ.,ஒடி பள்ளி வளாகத்தில் நிறைவு செய்தனர்.