/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
/
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஜூலை 06, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை பறக்கும் படை, உதவி இயக்குனர் முத்து, நேற்று முன்தினம் இரவு, ஆட்டுகாரம்பட்டியில் வாகன தணிக்கை நடத்தினார்.
அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில், 3 யூனிட் கிராவல் மண் கடத்தியது தெரிந்தது. டிரைவர் தப்பிய நிலையில், டிப்பர் லாரியை போலீசில் ஒப்படைத்தார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிகின்றனர்.