/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குவாரி உரிமையாளர்களை கண்டித்து டிப்பர் லாரிகள் வேலை நிறுத்தம்
/
குவாரி உரிமையாளர்களை கண்டித்து டிப்பர் லாரிகள் வேலை நிறுத்தம்
குவாரி உரிமையாளர்களை கண்டித்து டிப்பர் லாரிகள் வேலை நிறுத்தம்
குவாரி உரிமையாளர்களை கண்டித்து டிப்பர் லாரிகள் வேலை நிறுத்தம்
ADDED : பிப் 07, 2024 12:11 PM
இண்டூர்: குவாரி உரிமையாளர்களை கண்டித்து, தர்மபுரி மாவட்டம் இண்டூரில், டிப்பர் லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த ரங்கன் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், 30க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்குகின்றன. மாவட்டம் முழுவதும், தர்மபுரி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் உள்ளவர்களால், 250 டிப்பர்கள் இயக்கப்படுகிறது. இதுநாள் வரை, குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லி, பி.சாண்ட், உளி கற்கள் உள்ளிட்டவை வாடகையின் அடிப்படையில், பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தோம். இந்நிலையில், கல்குவாரி உரிமையாளர்கள், சொந்தமாக டிப்பர் லாரிகளை வாங்கி, அதன் மூலம் கடந்த சில நாட்களாக விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக ஒரு யூனிட் எம்.சாண்ட், சேலம் மாவட்டத்தில், 1,800 ரூபாய்க்கும், தர்மபுரி குவாரிகளில், 3,000 ரூபாய் எனவும் விற்பனை செய்கின்றனர். அதை, வாடகையுடன் சேர்த்து, 4,000 ரூபாய்க்கு நாங்கள் விற்பனை செய்தோம். இப்போது குவாரி உரிமையாளர்கள் நேரடியாக, வாடகையுடன் சேர்த்து, 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதனால், இதை நம்பியிருந்த, 1,000 குடும்பங்களின் தொழில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, குவாரி உரிமையாளர்களை கண்டித்து, டிப்பர் லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளோம். இதற்கு, மாவட்ட நிர்வாகம், உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

