/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பென்னாகரம் பார்முலாவை கடைபிடிக்க வேண்டும்'
/
'வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பென்னாகரம் பார்முலாவை கடைபிடிக்க வேண்டும்'
'வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பென்னாகரம் பார்முலாவை கடைபிடிக்க வேண்டும்'
'வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பென்னாகரம் பார்முலாவை கடைபிடிக்க வேண்டும்'
ADDED : மே 28, 2025 01:40 AM
தர்மபுரி :''வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, பென்னாகரம் இடைத்தேர்தல் பார்முலாவை கடைபிடிக்க வேண்டும்,'' என, தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசினார்.ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், நேற்று தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. தர்மபுரி பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பி., மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தல் தர்மபுரி மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான வேலு பேசியதாவது:
பென்னாகரம் பார்முலாவை கடைபிடித்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டும். சேலத்திலும் இதைத்தான் சொல்லிவிட்டு வந்துள்ளேன். தர்மபுரிக்கு மாப்பிள்ளை அமைச்சர் பன்னீர்செல்வம்தான். அவர் தான் மாவட்ட பொறுப்பு அமைச்சர். நான் திருமணத்திற்கு வந்துள்ளேன். எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் என்னிடம் எழுதிக் கொடுங்கள். கோஷ்டி பூசல் வேண்டாம். பூத் கமிட்டியில் வேலை செய்பவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
மாவட்டத்திலுள்ள, 5 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டுமானால், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். கட்சியில் நிலவும் கோஷ்டி பூசல் மற்றும் பிரச்னைகளை சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடாது. ஆனால், அரசின் சாதனைகளை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும். கடந்த, 2010ல் பென்னாகரம் இடைத்தேர்தலின் போது, மறைந்த, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மூன்றரை நாட்கள் பிரசாரம் செய்தார். ஆனால், அ.தி.மு.க., டிபாசிட் இழந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, 2 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்தார். நாம் அமோக வெற்றி பெற்றோம். பென்னாகரம் இடைத்தேர்தல் பார்முலாவை கடைபிடித்து, 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, தர்மபுரி மாவட்டத்தை, தி.மு.க., கோட்டையாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.