/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விலை குறைவால் தோட்டத்தில் கருகும் தக்காளி
/
விலை குறைவால் தோட்டத்தில் கருகும் தக்காளி
ADDED : ஏப் 24, 2025 01:26 AM
மாரண்டஹள்ளி:
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த பிப்., மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மாவட்டத்தின் பல இடங்களில் ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்று பாசனம் மூலம், விவசாயிகள் தொடர்ந்து, தக்காளி சாகுபடி செய்து வருவதால், சாகுபடி அதிகரித்த நிலையில், வரத்து அதிகமாக இருந்தது. இதனால், விலைவில் சரிவு ஏற்பட்டு, கடந்த இரண்டு மாதமாக ஒரு கிலோ தக்காளி, 10 ரூபாய் முதல், 12 ரூபாய் என்ற அளவிலேயே விற்பனையாகிறது.
இதில், 25 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ், 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், விவசாயிகளிடம் ஒரு கிலோ தக்காளி, 4 முதல், 5 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், பெரும் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள், தோட்டங்களில் அறுவடைக்கு தயார் நிலையிலுள்ள தக்காளியை அறுவடை செய்யும் கூலிக்கு கூட கட்டுபடி ஆகாததால், பழுத்த தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்தில் அப்படியே விட்டு விட்டனர். இதில், தோட்டத்தில், செடிகள் மற்றும் தக்காளி கருகி வருகின்றன.