ADDED : அக் 02, 2026 02:26 AM

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விலை ஒரே நாளில், 10 ரூபாய் உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி அதிகம் விளையும் பாலக்-கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்-டார பகுதிகளில் கடந்த, 6 மாதங்களாக வறட்சி நிலவியது. இதனால், தக்காளி சாகுபடி பரப்பு குறைந்தது. கடந்த வாரங்-களில் பெய்த கனமழையால், தற்போது தக்காளி வரத்து குறைந்-துள்ளது.தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டி-லிருந்து ஈரோடு, திண்டுக்கல், கோவை, மதுரை, சென்னை உள்-ளிட்ட காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி, 34 ரூபாய் என விற்ற நிலையில் நேற்று ஒரே நாளில், 10 ரூபாய் உயர்ந்து, 44 ரூபாய் என விற்றது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி, 50 முதல், 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு, தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி விலை மேலும் உயரக்-கூடும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
