தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/நாளை மாவட்ட அளவில் விரைவு மிதிவண்டி போட்டி

நாளை மாவட்ட அளவில் விரைவு மிதிவண்டி போட்டி

நாளை மாவட்ட அளவில் விரைவு மிதிவண்டி போட்டி


ADDED : நவ 13, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி; தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தர்மபுரி பிரிவு சார்பாக, தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்., 15ல், மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டி போட்டிகள், நாளை நவ., 14ம் தேதி காலை, 7:00 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்க உள்ளது.

இதில், 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நான்கு ரோடு - அரசு மருத்துவமனை, பழைய கலெக்டர் அலுவலகம் சென்று, மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு வர வேண்டும். மாணவியர், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, நான்குரோடு - அரசு மருத்துவமனை - பாரதிபுரம் சென்று திரும்பி மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானம் வர வேண்டும். மேலும், 15 வயதிற்கு உட்பட்ட மற்றும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, நான்கு ரோடு - அரசு மருத்துவமனை - மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஒட்டப்பட்டி வரை சென்று, மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானம் வர வேண்டும். மாணவியர், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, நான்குரோடு - அரசு மருத்துவமனை - மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று, மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானம் வர வேண்டும்.இப்போட்டிகளில் முதல், 3 இடங்களில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முறையே தலா, 5,000, 3,000, 2,000 ரூபாய், 4 முதல் 10 இடங்களை பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா, 250 ரூபாய் வீதம், காசோலை அல்லது வங்கி மாற்றுவழி மூலமாக பரிசு வழங்கப்படும். சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தியாவில் தயாரான மிதிவண்டிகள் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us