/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உழவு இயந்திரத்தில் சிக்கி டிராக்டர் டிரைவர் பலி
/
உழவு இயந்திரத்தில் சிக்கி டிராக்டர் டிரைவர் பலி
ADDED : ஜூலை 27, 2025 01:18 AM
பென்னாகரம் :தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பெரியபள்ளத்துார் கிராமத்தை
சேர்ந்தவர் மூர்த்தி, 52. டிராக்டர் வைத்துள்ளார். இவர் மனைவி செல்வி. இவர்களுக்கு, 2 மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று காலை ராஜாவூரை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான
விவசாய நிலத்தில் டிராக்டரில் உழவு பணியை மூர்த்தி மேற்கொண்டிருந்தார்.
அப்போது உழவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்ய டிராக்டரில் இருந்து இறங்கி உழவை இயந்திரத்தை சரி செய்த போது, எதிர்பாராத விதமாக உழவு இயந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மதியம் வரை டிராக்டர் ஒரே இடத்தில் நின்றிருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், டிராக்டர் அருகே சென்று பார்த்தனர். அப்போது, மூர்த்தி உழவு இயந்திரத்தில் சிக்கி இறந்து
கிடந்ததை பார்த்தனர். சம்பவ
இடத்திற்கு பென்னாகரம்
தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வந்து உடலை மீட்டனர். பென்னாகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.