ADDED : ஜூலை 31, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு,
பாலக்கோட்டில், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மற்றும் பெண் விவசாயிகள் சங்கம் சார்பில் பாரம்பரிய விதை திருவிழா மற்றும் சிறுதானிய உணவு மீட்டெடுத்தல் கருத்தரங்கம், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கநாயகி தலைமையில் நடந்தது.
பெண் விவசாயிகள் ஊர்வலமாக, தானியங்கள் மற்றும் மண்பானையை எடுத்துக்கொண்டு பாரம்பரிய விதையை மீட்டெடுத்து, சிறுதானிய உற்பத்தியை பெருக்கி, மக்களின் ஆரோக்கியத்தை காப்போம் என கோஷமிட்டும், கிராமிய கும்மி பாடலுக்கு நடனமாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

