/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பார்க்கிங் வசதியின்றி கட்டப்படும் வணிக நிறுவனங்களால் போக்குவரத்து நெரிசல்
/
பார்க்கிங் வசதியின்றி கட்டப்படும் வணிக நிறுவனங்களால் போக்குவரத்து நெரிசல்
பார்க்கிங் வசதியின்றி கட்டப்படும் வணிக நிறுவனங்களால் போக்குவரத்து நெரிசல்
பார்க்கிங் வசதியின்றி கட்டப்படும் வணிக நிறுவனங்களால் போக்குவரத்து நெரிசல்
UPDATED : நவ 30, 2024 08:48 PM
ADDED : நவ 29, 2024 01:24 AM
அரூர் : அரூர் கச்சேரிமேட்டிலிருந்து, 4 ரோடு வரையுள்ள பைபாஸ் சாலையில், ஸ்டேட் வங்கி, கனரா வங்கி மற்றும் தனியார் வங்-கிகள் என, 7க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. அதேபோல், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், நகை கடைகள், பேக்கரி, ஓட்டல், இரும்பு, மரம், எலக்ட்ரிக், ஜவுளிக்கடைகள், இருசக்கர வாகன ஷோரூம்கள் உள்ளிட்ட முக்கிய வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இவற்றிற்கு தினமும், ஏராளமானோர் வந்து செல்வதால், மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.
வியாபார நிறுவனங்களும், வணிக வளாகங்களும் பார்க்கிங் வசதி இல்லாமலேயே செயல்படுகின்றன. இதனால், அந்த நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். அதனால், போக்குவரத்து நெரிசலாகி மக்களும், வாகன ஓட்டிகளும் பரிதவிக்கின்றனர். வாகனங்கள் ஒரு வழிச்சாலையில் செல்வது போல், ஒன்றின் பின் ஒன்றாக மட்டுமே செல்ல முடிகிறது. இதனால், தினமும் விபத்து ஏற்படுகிறது.
பெரிய கடைகள், நிறுவனங்கள், உணவகங்களில் வாகனம் நிறுத்த வசதி ஏற்படுத்தாவிடில், உரிமத்தை புதுப்பிக்க அனுமதிக்கக்கூடாது. விதிகளை மீறும் தனி நபர், நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது போன்ற கடும் நடவடிக்கையை டவுன் பஞ்., நிர்வாகம் எடுக்க வேண்டும். மேலும், போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பு தொடர்ந்தால் மட்டுமே, விதிமீறலை தடுக்க முடியும்.

