/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெற்றி ஐ.ஏ.எஸ்., மையம் சார்பில் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்
/
வெற்றி ஐ.ஏ.எஸ்., மையம் சார்பில் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்
வெற்றி ஐ.ஏ.எஸ்., மையம் சார்பில் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்
வெற்றி ஐ.ஏ.எஸ்., மையம் சார்பில் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்
ADDED : செப் 07, 2025 01:11 AM
கிருஷ்ணகிரி :சென்னை வெற்றி ஐ.ஏ.எஸ்., கல்வி மையம், தற்போது கிருஷ்ணகிரியில் தொடங்கப்படுகிறது. இதையொட்டி ஐ.ஏ.எஸ்.,/டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்பது குறித்த இலவச பயிற்சி முகாம், கிருஷ்ணகிரியில் இன்று (7-ம் தேதி) நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கையேடு, பாடத்திட்டம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இது குறித்து, வெற்றி ஐ.ஏ.எஸ்., கல்வி மைய இயக்குனர் சண்முகம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. போட்டி தேர்வுகளில் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு, சிறப்பான வல்லுனர் குழு மூலமாக தரமான பாடக் குறிப்புகளை கொண்டு பயிற்சி வழங்கி வருகிறோம். தற்போது ஐ.ஏ.எஸ்.,/டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, குரூப் 2/ 2ஏ, குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்பது குறித்த இலவச போட்டித்தேர்வு பயிற்சி முகாம் நடத்த உள்ளோம்.
அதன்படி கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, ஸ்ரீ வெற்றி வேல் திருமண மண்டபத்தில் இன்று காலை 10:00 மணிக்கு போட்டித்
தேர்வு பயிற்சி முகாம் நடக்கிறது. முகாமை டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் தொடங்கி வைத்து பேசுகின்றனர். நான் மற்றும் ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் சாதிக் ஆகியோர் சிறப்பு பயிற்சியாளராக முகாமை வழி நடத்துகிறோம். இவ்வாறு கூறினார்.
முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, வெற்றி ஐ.ஏ.எஸ்., கல்வி மையத்தின் டி.என்.பி.எஸ்.சி., பொதுத்தமிழ் புத்தகம், பொது ஆங்கில புத்தகம், பாடத்திட்ட குறிப்பு, 6 மாத நடப்பு நிகழ்வு புத்தகம், பேனா, தண்ணீர் பாட்டில் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளன.
மேலும் விபரம் பெற, 98844 21666, 98844 32666 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.