ADDED : டிச 09, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொரப்பூர்: மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது. பி.டி.ஓ., மணிவண்ணன் தலைமை வகித்து பேசினார்.
மொரப்பூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெங்கடேசன், கை கழுவும் வழிமுறைகள், உடல் நலம் பேணுதல் குறித்து பேசினார். மொரப்பூர் ஒன்றிய (பொறுப்பு) உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஊட்டச்சத்து தகவல்கள் குறித்து நேரடி செயல் விளக்கம் அளித்தார். இதில், 80க்கும் மேற்பட்ட சமையலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.