/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊட்டச்சத்து மேலாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி
/
ஊட்டச்சத்து மேலாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : செப் 06, 2025 01:05 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி வட்டாரத்தில் வேளாண்துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு (அட்மா) திட்டத்தில், குப்பச்சிப்பாறை கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் சிவநதி பயிற்சியை துவக்கி வைத்து, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார். அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் ஞானகீர்த்தி சகாசா, 'மண் வளத்தை காப்பதற்கான வழிமுறைகள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தில் பெறக்கூடிய லாபம், மானிய திட்டங்கள், நுண்ணுாட்டச்சத்து இடுவதன் நன்மைகள், பஞ்சகாவியா தயாரித்தல், பூச்சி விரட்டி, மண்புழு உரம் தயாரித்தல்' குறித்து விளக்கம் அளித்தார். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கையேடு வழங்கப்பட்டது.