/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவசாயிகளுக்கு அங்கக சான்றளிப்பு குறித்து பயிற்சி
/
விவசாயிகளுக்கு அங்கக சான்றளிப்பு குறித்து பயிற்சி
ADDED : செப் 06, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை துறை சார்பில், ஆலாபுரத்தில் விவசாயிகளுக்கு அங்கக சான்றளிப்பு குறித்து, மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் அருணன் தொடங்கி வைத்தார்.
விதை சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் மதியழகன், உயிர்ம சான்று பெறுவது குறித்தும், அங்கக சான்றிதழ் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். முன்னோடி விவசாயி சாமிக்கண்ணு, உதவி வேளாண்மை அலுவலர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.