/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி
/
ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : நவ 15, 2024 02:14 AM
ஓட்டுச்சாவடி நிலைய
அலுவலர்களுக்கு பயிற்சி
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 15---
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் வரும், 16ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் சிறப்பு முகாம் நடக்கிறது.
இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, பயிற்சி வகுப்பு, நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தனியார் மண்டபத்தில் அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமையில் நடந்தது.
இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் மற்றும் சிறப்பு முகாம் நாட்களில், செய்ய வேண்டிய பணிகள் குறித்து, வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மொபைல் ஆப் மூலம் படிவங்கள் பூர்த்தி செய்வது குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தாசில்தார் வள்ளி, தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம், ஆர்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.