/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மொரப்பூர் வழியாக கோவை செல்லும் ரயில்கள் ரத்து அரூரிலிருந்து சேலத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்

ADDED : ஜூலை 15, 2025 01:35 AM
அரூர், சேலம் வழியாக, கோவை செல்லும் ரயில்கள் ரத்தான நிலையில், பயணிகள் வசதிக்காக, அரூரில் இருந்து சேலத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். அதேபோல், ஏராளமானோர் வெளியிடங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். மேலும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் கூலிவேலை செய்கின்றனர். இவர்கள் மொரப்பூர் ஸ்டேஷன் சென்று, அங்கிருந்து ரயில் மூலம் ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், திருவள்ளூர் அருகே நேற்று முன்தினம் அதிகாலை சரக்கு ரயில் விபத்துக்கு உள்ளாகி, தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, சென்னையில் இருந்து மொரப்பூர் வழியாக, சேலம், ஈரோடு, கோவை செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் ரயில் பயணத்தை திட்டமிட்டவர்கள் பலரும் பஸ்களில் சேலம் சென்று அங்கிருந்து, ஈரோடு, கோவை செல்ல, அரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். தொடர்ந்து, சேலம் செல்லும் தனியார் பஸ்களில் முண்டியடித்து ஏறினர். இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக, அரூரில் இருந்து சேலத்திற்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.